ஒசாமாவுக்கு மரணதண்டனை-இனப்பிரச்சினைக்கு தீர்வு:ஒபாமா விருப்பம்
ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்படும் பட்சத்தில்,அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்....
ஓசாமா பின்லேடேன் உயிருடன் பிடிபட்டால் அவன் மீது அமெரிக்க சட்டம் மட்டுமின்றி உலக அளவில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மரணதண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.மரண தண்டனை வழங்கப்படுவது எனது விருப்பம் அல்ல.ஆனால் கொடூரமான பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு மரணதண்டனை தவிர வேறு வழியில்லை.
அமெரிக்க அதிபராக நான் பொறுப்பேற்கும் பட்சத்தில்,இனப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவன் கொடுப்பேன்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.