TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » உலகம் » Page 3  உலகம் RSS Feed

ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
 விரிவு »

செல்போன்களை உபயோகிக்கும் சிறுவர்களுக்கு மூளைப் புற்றுநோய் தாக்கும் அபாயம்!

கையடக்கத் தொலைபேசிகளை (செல்போன்) உபயோகிக்கும் சிறுவர்களுக்கு மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டிஷ் செய்தித் தாளான "இன்டிபென்டன்ட்' இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
 விரிவு »

ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்கிறார் பாகிஸ்தான் அதிபர் - அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவுள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் புஷ் அவர்களையும் பாகிஸ்தான் அதிபர் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ஆசிப் அலி சர்தாரி இந்திய அதிபரையும் சந்திப்பார் என தலவல்கள் தெரிவிக்கின்றன.
 விரிவு »

சீனாவில் இரவு விடுதியில் தீ விபத்து; 43 பேர் பலி

சீனாவின் செஞ்சென் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 88 பேர் காயமடைந்துள்ளனர்.கொங்கொங்கின் எல்லையிலுள்ள டான்ஸ் கிங் இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. அச் சமயம் விடுதியில் 1000 பேர் வரை இருந்துள்ளனர்.
 விரிவு »

இஸ்லாமாபாத்திலுள்ள உல்லாசவிடுதியொன்றில் குண்டுவெடிப்பு 60 பேர் பலி 200ற்கும் அதிகமானோர் காயம்!


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள உல்லாசவிடுதியொன்றில் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் 60 பேர் கொல்லப்பட்டும் 200ற்கும் அதிகமானோர் படுகாயம்  அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 விரிவு »

இன்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினிகளின் இரகசியங்களை திருடிய இந்திய பொறியியலாளர்!

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை திருடியதாக இந்திய கணினி பொறியியலாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த கணினி பொறியியலாளர் பிஸ்வமோகன் பானி அமெரிக்காவில் உள்ள இன்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 விரிவு »

வடகிழக்கு ஆபிரிக்க பகுதியில் ஐ.நா. படைகளை நடவடிக்கையில் ஈடுபடுத்த பான்கீமூன் அழைப்பு

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மத்திய ஆபிரிக்க பகுதிகள் மற்றும் சாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு இராணுவத்தை அனுப்புமாறு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 விரிவு »

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
 விரிவு »

புதுடில்லி தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்தியத் தலைவர்கள் கண்டனம்

இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.  இந்தச் செயல் முட்டாள்தனமானதென்பதுடன், மக்கள் அமைதி காக்க வேண்டுமெனவும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குறிப்பிட்டார்.
 விரிவு »

இந்தியாவில் குண்டு வெடிப்பு 18 பேர் பலி 90 பேர் காயம்!


டில்லியில் கரோல்பாக், கனாட் பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 18 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6.15 மணியளவில் மக்கள் நெரிசல் மிகுந்த கரோல்பாக் சந்தைப் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. அது கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 விரிவு »
முன் பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்