ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம்: பால்தாக்கரே
[தமிழக நேரம் : February 3rd, 2010 at 15:36]
மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம். யாராவது இந்த உண்மையை சாகடித்தால்நாங்கள் ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். மும்பை இந்தியர்களுக்கு சொந்தம் என்று கூறி வருபவர்களை எல்லாம்பால்தாக்கரே கடுமையாக சாடி வருகிறார்.
காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. முதன்முறையாக மும்பை பற்றிகருத்து தெரிவிக்கையில், மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானதுஎன்று கூறினார். இதற்கு பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பால்தாக்கரே கூறி இருப்பதாவது: மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம் என்று ராகுல்காந்தி சொல்கிறார்.ஆனால் இத்தாலி அம்மாவுக்கு மும்பை எப்படி சொந்தமாகும். ராகுல் தனதுகருத்தின் மூலம் மராத்தி மக்களையும், மராட்டியத்தையும் அவமானப்படுத்திவிட்டார்.
வந்தவர்கள் எல்லாம் தங்குவதற்கு மும்பை ஒன்றும் தர்மசாலை அல்ல.மராட்டியத்தை காப்பாற்றுவதற்காக 1920 ல் 150 பேர் கொல்லப்பட்டனர். 150பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க மும்பை எப்படி தர்மசாலையாகும். பீகார் மாநிலத்தை சேர்ந்த கமாண்டோக்கள் தான் மும்பையை காப்பாற்றினார்கள்என்று ராகுல்காந்தி கூறினார். கமாண்டோக்கள் வரும் முன்பே தீவிரவாதிகளுடன்போராடி ஹேமந்த் கார்கரே, விஜய் சலாஸ்கர், அசோக் காம்தே, துக்காராம்ஆகியோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனவே மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம். யாராவது இந்த உண்மையைசாகடித்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம் என்றுகூறியுள்ளார்.
|