TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » உலகம் » நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா

நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா

நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா வெற்றி பெற்றுள்ளார்.  நேபாளத்தின் பிரதமர் பதவிக்காக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டாவும், இவரை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பாவும்  போட்டியிட்டனர்.  

மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவுக்கு ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் மாதேசி கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தது.

601 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 577 வாக்குகள் பதிவாகின. இதில் மாவோயிஸ்ட் கட்சியின்  தலைவர் பிரசண்டா 464 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதேவேளை தேவ்பாவுக்கு 113 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

நேபாளத்தில் கடந்த மே மாதம் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அந்த நாட்டின் முதலாவது பிரதமராக முன்னாள் கிளர்ச்சி மாவோயிஸ்ட் தலைவரான பிரசண்டா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் நிலவிவந்த கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் ஒரு முக்கிய முன்னேற்றமாக இந்த வெற்றி கருதப்படுகிறது.

யார் நாட்டை ஆள்வார்கள் என்பதில் மையநீரோட்ட அரசியல் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே பல மாதங்களாக இருந்து வந்த முட்டுக்கட்டையானது, பிரசண்டா பிரதமராக தேர்ந்;தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்