|
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்க தமிழ்ப்பெண் நியமிக்கப்படலாம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்க தமிழ்ப்பெண் நீதியாளர் நவநீதம் பிள்ளை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்பொழுது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் பணியாற்றிவரும் இவரது பெயரை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் சிபார்சு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தற்போதைய ஆணையாளரான கனடாவைச் சேர்ந்த லூயிஸ் ஆர்பர் அம்மையார் விரைவில் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.அதன் இடத்திற்கே இவர் நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |