தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக போராட்டம்

0 29

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதைக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூரியதாவது:-

ஓரணியில் திரண்டுள்ள தமிழக இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சியாக ஐபிஎல் போட்டி இருக்கிறது. இதனால் தான் ஐபிஎல் போட்டி தற்போதைக்கு நடக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வேண்டாம் என்று நாங்கள் எப்பொழுதும் கூறவில்லை. எங்கள் போராட்டத்தை திசைத் திருப்பாமலும், எங்கள் உணர்வுக்கு மதிப்பலித்து அதை தள்ளிப்போட வேண்டும் என கூறுகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் பெற்று தர வேண்டும் எனவும் வலியுறுத்து இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என இயக்குனர் பாரதிராஜா கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.