அவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்

0 102

சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் அதுவும் ஒரேயொரு படம் மூலம் ஏகப் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார். மலையாள ரசிகர்களை போன்றே தெலுங்கு ரசிகர்களுக்கும் சாய் பல்லவியை மிகவும் பிடித்துவிட்டது.

சாய் பல்லவி படப்பிடிப்புக்கு வந்தால் ஓவர் திமிராக நடந்து கொள்வதாகவும், ஹீரோக்களை மதிக்காமல் அடாவடியாக நடப்பதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

சாய் பல்லவிக்கும், ஏற்கனவே திருமணமான நடிகர் ரவி தேஜாவுக்கும் இடையே தொடர்பு என்று யாரோ கொளுத்திப் போட அது தீயாக பரவிவிட்டது. இறுதியில் ரவி தேஜாவின் தந்தை விளக்கம் அளித்தார்.

சாய் பல்லவி வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது பொறாமைப்பட்டு தான் அவரை பற்றி வதந்திகளாக பரப்பிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

தன்னை பற்றி வரும் வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம். வதந்தி பரப்புபவர்கள் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறாராம் அவர்.

Leave A Reply

Your email address will not be published.