விஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்!!

0 11

கீர்த்தி சுரேஷ், விஜய்

கீர்த்தி சுரேஷ் ‘விஜய் 62’ படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்62 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘மகாநதி’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது

இதில் இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் நிஜ வேடத்தில் நடித்திருந்தார். நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக நடித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இதனால், எஸ்.எஸ்.ராஜமௌலி, கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் கீர்த்தியின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவருக்கு சமூக வலைதளங்களில் எராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பட ஷூட்டிங்கில் விஜய்யுடன் இணைந்துள்ளார். அவரும் விஜய்யும் ஆடிப்பாடிய டுயட் காட்சிகளை கேமராமேன் ஸ்ரீதர் படமாக்கியிருக்கிறார்.

இதற்கிடையில், ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளாராம். இதனால், படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக நடித்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

Leave A Reply

Your email address will not be published.