மீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி!

0 10

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார்.

ஏற்கெனவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love என்ற பாடல் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது. மேலும் கடந்த ஜூலை 29ம் தேதி ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டது.

முன்னதாக வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்தார்கள். இந்நிலையில், தற்போது திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன் படி நாளை பியார் பிரேமா காதல் படம் திரைக்கு வெளியாக உள்ளது.

As a mark of respect to the departed leader #Kalaignar Ayya, we have pushed the release of our film #PyaarPremaKaadhal to the 10th of August! 🙏🏼pic.twitter.com/EFQad8ZQPt

— Harish kalyan (@iamharishkalyan) August 8, 2018

Leave A Reply

Your email address will not be published.