மீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்!

0 26

மோனி ராய்

பிரபல இந்தி தொடரான நாகினி-யில் நடித்த மௌனி ராய் தற்போது மீண்டும் தொலைகாட்சிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார்.

அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது ‘RAW: Romeo Akbar Walter’ என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில் தற்போது இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் உறுவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் மௌனி ராய்.

தற்போது பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள இவர் தற்போது மிண்டும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. ஆனால் இம்முறை தொலைகாட்சி தொர்களில் அல்ல, சக்தி என்னும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியினை தொலைக்காடசியில் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலாய் காத்துள்ளனர்!

Leave A Reply

Your email address will not be published.