சிவகார்த்திக்கேயன், நயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார்!

0 17

சிவகார்த்திக்கேயன், நயன், ராதிகா

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்கே13 எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி இப்படத்துக்கு இசை அமைக்கிறார். ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும் நடிப்பதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது.

கே ஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார்.

நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது.

சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.