சண்டை போட்டேன்: கார்த்தி

0 13

தேவ் திரைப்படம் குறித்த பல விஷயங்களை கார்த்தியும் ரஜத்தும் பகிர்ந்துள்ளனர்.

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் தேவ். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படம் பற்றி பேசியுள்ள ரஜத், நடிகர் கார்த்தியின் அர்ப்பணிப்பு அளப்பறியது என புகழ்கிறார்.

தேவ் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். மேக்னா என்ற கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கதைப்படி ரகுல் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கார்த்தி ஒரு பாசிட்டிவான ஆளாக இப்படத்தில் இருக்கிறார். இப்படத்தில் சாகசம், ரொமான்ஸ், ஆக்‌ஷன், நட்பு போன்ற விஷயங்களைத் தாண்டி நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கும் என்கிறார் ரஜத்.

தேவ்
தேவ்

சென்னை, ஹைதராபாத், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கியிருக்கிறோம். உக்ரைனிலிருந்து 1500 கிலோமீட்டர் பயணித்து கேப்பதியன் மவுண்டைனில் படப்பிடிப்பு நடத்தினோம். வேறு யாரும் அங்கு சென்றதில்லை என நினைக்கிறேன். உக்ரைனில் நீருக்கடியிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை படமாக்கினோம். அந்த தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இல்லை. மற்ற நடிகர்கள் என்றால் அதில் குதிக்க யோசிப்பார்கள், அனால் கார்த்தி சட்டெனெ குதித்துவிட்டார். அந்த காட்சி மட்டுமே பதினைந்த்னு டேக்குகள் போனது. நன்றாக வரவேண்டுமென்பதற்காக அர்ப்பணிப்போடு அதை கார்த்தி செய்து முடித்ததார் எனக் கூறினார்.

தேவ்
தேவ்

படம் பற்றி கார்த்தி பேசும்போது, இந்த படம் எங்களை பல ஊர்களுக்கு அழைத்துச் சென்றது. ஒரு ஊருக்குப் போனோமா படத்தை முடிச்சோமான்னு இல்லாம ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கோம் என்று சண்டபோட்டேன். ஆனால் இது நல்ல அனுபவமாக இருந்தது. ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.

ரகுல் ப்ரீத் சிங் பற்றி பேசும்போது அவர் எப்பவுமே பிசியாக இருக்கும் நடிகை. ஒரு காட்சியில் நடிக்கும்போது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பற்றி யோசித்துக்கொண்டிருப்பார் என கிண்டலடித்த அவர், சவால்களை ஏற்கக்கூடிய தைரியமான பெண் என்றும், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைப் போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.