பாலியல் பலாத்கார முயற்சி: நிவேதா பெத்துராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்

0 8

நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்துள்ளார்.

நேற்று நடந்த அந்த படத்தின் பிரஸ் மீட்டில் நிவேதா பெத்துராஜ் மீடூ சர்ச்சை பற்றி பேசினார். தானும் அதை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

தான் ஒரு பார்ட்டிக்கு சென்றதாகவும் அங்கு தன்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“தவறு என் மீது தான். நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.