சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளது: கணவர் நாக சைதன்யா

0 102

சமந்தா, நாக சைதன்யா

சில காட்சிகளில் சமந்தாவுடன் சேர்ந்து நடிப்பது கஷ்டமாக உள்ளதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், அவரின் மனைவி சமந்தாவும் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இந்நிலையில் மனைவியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி நாக சைதன்யா கூறியதாவது,

நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடிப்பதால் வீட்டிற்கு ஒரே நேரத்தில் திரும்பி வருகிறோம். காலையில் சமந்தா எனக்கு முன்பு சென்றுவிடுவார். செட்டில் ஒன்றாக நேரம் செலவிடுகிறோம். படத்தில் நாங்கள் எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் நிஜத்திலோ நாங்கள் சண்டை போட்டதே இல்லை.

நிஜத்தில் சண்டை போடாததால் படத்தில் சண்டக்கோழியாக நடிப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பதன் மூலம் பிற நடிகைகளுக்கு என் மனைவி முன் உதாரணமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதிர்ஷ்டவசமாக அவருக்கு சில நல்ல படங்கள் கிடைத்தன. அவரின் கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்ய முடிகிறது. எதையும் சந்திக்கும் தைரியம் உள்ளவன் நான். பார்ட்னர் வந்துள்ளதால் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. மற்றபடி தனிப்பட்ட முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் நாக சைதன்யா.

திருமணம் முடிந்த உடன் தேனிலவுக்கு கூட போக முடியாத அளவுக்கு நாக சைதன்யாவும், சமந்தாவும் படங்களில் பிசியாக இருந்தனர். ஒப்புக் கொண்ட பட வேலைகளை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றனர். திருமணமாகிவிட்டது என்பதால் சமந்தாவின் மார்க்கெட் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.