புகைப் பழக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்! #QuitSmoking

0 6

புகைப்பழக்கம் இருப்பவர்கள் அனைவருமே அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கையோடுதான் இருப்பார்கள் அந்த வேட்கை செயலாக மாறினால் அந்தப் பழக்கத்திலிருந்து எளிதாக வெளியேறிவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள் புகைக்கத் தூண்டும் காரணிகளை எதிர்கொள்ளத் தெரிந்துவிட்டால் போதும் அதென்ன புகைக்கத்தூண்டும் காரணிகள் `சிகரெட் டிரிக்கர்ஸ்39 என்பார்கள் மருத்துவ மொழியில் புகைப்பழக்கத்தின் மீதான இந்தத் தூண்டுதலைக் கட்டுப்படுத்த மனதளவில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எண்ணங்களை எப்படி நெறிப்படுத்த வேண்டும்  ஆலோசனை தருகிறார் மனநல மருத்துவர் சங்கீதா சங்கரநாராயணன்அதிகமாக உணர்ச்சிவசப்படும்போது நண்பர்கள் அழைக்கும்போது அதீத யோசனையில் இருக்கும்போதெல்லாம் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உந்தத் தொடங்கும் சிகரெட் எண்ணிக்கையைக் குறைக்கும்போது உடலில் ஏற்படும் நிக்கோட்டின் அளவின் வித்தியாசம்கூட மீண்டும் புகை பிடிக்குமாறு மூளைக்கு அறிவுறுத்தும் இப்படி டிரிக்கர்ஸில் பல வகைகள் இருக்கின்றன  `எமோஷனல் டிரிக்கர்ஸ்39 (Emotional Triggers) மனஅழுத்தத்துடன் இருப்பது மிகவும் மனநிறைவுடன் இருப்பது அதிக பதற்றமாக உணர்வது வேலை ஏதுமின்றி சலிப்புணர்வுடன் இருப்பது தனிமையை உணர்வது நெருங்கிய நபர்களுடன் சண்டையிட்டுக் கோபமாக இருப்பது போன்ற சூழலில் உடனடியாகப் புகை பிடிக்க வேண்டும் எனத் தோன்றும் இவர்களை `எமோஷனல் டிரிக்கர்ஸ்39 என்பார்கள் ஆனால் ஆளைப் பொறுத்து இவை மாறுபடும் இவற்றிலிருந்து விடுபடுவது எளிது எந்தவொரு உணர்வையும் கட்டுப்படுத்த தெரிந்தால் போதும் புகைப் பழக்கம் இல்லாத அதேநேரம் உங்கள்மீது அக்கறையுள்ள ஒருவரிடம் உங்களது எமோஷனை பகிர்ந்துகொண்டால் போதும் தொடர்ந்து சில நிமிடங்கள் மூச்சை உள்ளே இழுத்து வெளிவிடுவது மற்றும் மெலடியான பாடல்களைக் கேட்கலாம் குறிப்பிட்ட எமோஷனிலிருந்து வெளியே வந்ததும் வேறு ஏதேனும் வேலையில் உங்களை ஈடுபடுத்துங்கள் வேறு எந்த எண்ணமும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் `சோஷியல் டிரிக்கர்ஸ்39 (Social Triggers)  நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் புகைப்பது பார்ட்டிகளுக்கு சென்றுவிட்டு புறத் தூண்டுதல்களால் புகைப்பது பொது இடங்களில் மற்றவர்கள் புகைப்பதைப் பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் புகைப்பது போன்ற சூழல்கள்தான் `சோஷியல் டிரிக்கர்ஸ்39 எனப்படுகிறது புகைப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் வாடிக்கையாகப் புகை பிடிக்கச் செல்லும் இடத்தைத் தவிர்க்க வேண்டும் தொடர்ந்து சில நாள்கள் புகைப்பவர்கள் இல்லாத சிகரெட் விற்பனை இல்லாத இடங்களில் நேரத்தைச் செலவிடுவது போன்ற சூழல்களை ஏற்படுத்த வேண்டும் `பேட்டர்ன் டிரிக்கர்ஸ்39 (Pattern Triggers)டிவி பார்ப்பது வண்டி ஓட்டுவது போன் பேசுவது போன்ற செயல்களை நாம் அன்றாடம் செய்துவருவோம் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் வேகவேகமாக அந்த வேலையை முடித்துவிட்டு புகை பிடிக்கச் செல்வதுண்டு அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாக இது இருப்பதால் இத்தகைய காரணிகளை எதிர்கொள்வது அதிக சிரமமானது காரணம் வேலை முடிந்தவுடன் புகை பிடிக்க வேண்டும் என மூளை தனது செயல்பாட்டை தனக்குள்ளே பழக்கப்படுத்தி வைத்திருக்கும் இது`பேட்டர்ன் டிரிக்கர்ஸ்39 எனப்படும்சிலருக்குக் காபி குடித்தவுடன் புகைக்க வேண்டும் எனத் தோன்றும் அப்படிப்பட்டவர்கள் வழக்கமாகக் காபி குடிக்கும் இடத்தையும் நேரத்தையும் மாற்ற வேண்டும் தினமும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் டீ காபி அருந்தலாம் டீ காபி என்று இல்லாமல் ஜூஸ் வகைகள் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம் படிப்பது எழுதுவது என மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் அதன்மூலம் அவர்களது எண்ணம் மாறும்அலுவலகத்தில் உணவு இடைவேளைகளின்போது புகை பிடித்துப் பழகியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிகரெட்டைக் கையில் எடுப்பார்கள் அந்தநேரத்தில் கொஞ்சதூரம் நடக்கலாம் காற்றோட்டமான மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தால் நல்லது நண்பர் குழுவை சில நாள்களுக்கு மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது உணவருந்தியதும் புகை பிடிக்க வேண்டும் என்று சிலருக்குத் தோன்றும் வீட்டில் சாப்பிடுபவர்கள் சாப்பிட்டவுடன் அந்த இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் உணவை வேறு பாத்திரங்களில் மாற்றி வைப்பது ஏற்கெனவே உள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்துவது என நேரத்தை ஓட்டலாம் இரவு நேரம் என்றால் உணவு உண்டதும் பல் துலக்க வேண்டும் மதிய உணவு சாப்பிடுபவர்கள் புதினா மணம் தரும் மிட்டாய்களைச் சாப்பிடலாம் இதன்மூலம் நாக்கில் சுவை மாறுவதுடன் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் குறையும்வாகனம் ஓட்டுபவர்கள் வாகனத்திலிருந்து இறங்கியதும் புகைக்க வேண்டும் என்று தோன்றும் வாகனத்திலிருந்து இறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது சுவிங்கம் சாப்பிடுவது என்று இருக்கலாம் வாகனத்தைவிட்டு இறங்கி அடுத்த செயலில் ஈடுபடும்வரை வாயில் மிட்டாய் அல்லது சுவிங்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்சலிப்புஉணர்வு அதிகமாக இருந்தால் சிலர் புகை பிடிக்கச் செல்வதுண்டு இவர்கள் சுடோகு குறுக்கெழுத்துப் போட்டி படம் வரைதல் ஜென்கா (jenga game) எனப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு எனக் கைகளுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் ஏதாவது ஒரு வேலையைச் செய்யலாம்இத்தகைய சூழல்கள் யாவும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதால் டிரிக்கரை தவிர்க்கும் வழிமுறைகளும் மாறுபடும் எந்தெந்தச் சூழலில் புகை பிடிக்கிறீர்கள் என்பதைப் பட்டியலிட்டு அந்த நேரத்தில் வேறு ஏதேனும் வேலையைச் செய்து வாருங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக மனதளவில் புகைப்பழக்கத்தைவிடவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த வேண்டும் அதனால் மட்டுமே இதுபோன்ற பேட்டர்ன் டிரிக்கர்ஸை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும் என்கிறார் சங்கீதா சங்கரநாராயணன்சிகரெட் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என முடிவெடுத்து சிகரெட் எண்ணிக்கையை நாளுக்குநாள் குறைத்து வந்தாலும் திடீரென சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதால் உடலில் நிக்கோட்டின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும் இதனால் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஏற்படும் இவை `வித்டிராவல் டிரிக்கர்ஸ்39 (Withdrawal Triggers) எனப்படும் இந்தத் தூண்டுதலிலிருந்து விடுபட உணவுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் இந்தத் தூண்டுதல் உணர்ச்சிகள் உடலில் சிலிக்கான் மற்றும் டைரோசைன் ஆகிய ஊட்டச்சத்துகள் குறைவதால் ஏற்படக் கூடியது எனவே அவை அதிகமாக உள்ள நட்ஸ் ஆரஞ்சு பச்சை நிறக் காய்கறிகளைத் தினமும் சாப்பிடலாம்மேற்கூறியவற்றில் கடைசியாகக் கூறப்பட்ட டிரிக்கர் மட்டுமே புகைப் பழக்கம் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடியது மற்றவை ஆளுக்கு ஆள் வேறுபடும் நீங்கள் புகை பிடிப்பவர் என்றால் உங்களுக்கு ஏற்படும் டிரிக்கர் எது என்பதை அறிந்து அதற்கேற்ற வழிமுறையைப் பின்பற்றி புகைப் பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடுங்கள்

Leave A Reply

Your email address will not be published.