செல்ஃபி வரிசையில் இது வேற மாதிரி – மெடிக்கல் செல்ஃபி!

0 17

நாம் வாழும் கணங்களை அப்படியே உறைய வைக்கும் ஆற்றல் புகைப்படங்களுக்கு உண்டு மகிழ்வின் கொண்டாட்டத்தின் ஸ்பரிசத்தை அவ்வப்போது அனுபவிக்க இனிமையான தருணங்களைப் புகைப்படங்களாக எடுத்துக்கொண்டால் போதுமானது கேமரா மொபைல் போன்கள் வந்த பின்னால் புகைப்படம் எடுப்பது இன்னும் எளிதாகியிருக்கிறது காலை 39டீ39யில் ஆரம்பித்து இரவு 39டின்னர்39 வரைக்கும் தங்கள் வாழ்வில் நிகழும் ஒவ்வோர் அசைவையும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நவீன யுவன்-யுவதிகள் 39ப்ளூ சட்டை செல்ஃபி39 39மேக்-அப் இல்லா செல்ஃபி39 என விதவிதமான டிசைன்களில் செல்ஃபிக்களை எடுத்து இணையத்தைக் கலக்கி வருகிறார்கள் அந்த வரிசையில் தற்போது புதிதாகக் களம் இறங்கியிருக்கிறது 39மெடிக்கல் செல்ஃபி39 மருத்துவமனையில் இருந்தபடியே செல்ஃபி எடுப்பதுதான் 39மெடிக்கல் செல்ஃபி39 ஒருவர் அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை முடிந்தநிலையில் அதை ஒரு புகைப்படமாக எடுத்து சிகிச்சையளித்த மருத்துவருக்கு அனுப்பி வைப்பது ஆனால் இதுமற்ற செல்ஃபிக்களைப்போல அந்த நேரத்து கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் 39நோயாளிகளின் நம்பிக்கையையும் திருப்தியையும் மேம்படுத்த உதவுவதாகவும் நோய் எவ்வாறு குணமடைகிறது என்பதைச் சரிபார்க்க  பயனுள்ள நினைவூட்டலாகப் பயன்படுவதாகவும்39 ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளதுஇந்த ஆய்வுக்காக முதலாவதாக 30 நோயாளிகள் அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆகியவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன இரண்டாவதாக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களின் புகைப்படங்களைப் பெற்றோர்களே எடுத்து சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு அனுப்புவது என இரண்டு வழிகளில் ஆய்வு நடத்தப்பட்டது ஆய்வின் முடிவில் இது 39நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையையும் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு திருப்தியையும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே சுமுகமான உறவு மேம்பட உதவுவதாகவும்39 தெரியவந்துள்ளது ஆய்வு முடிவு மருத்துவ இணைய ஆராய்ச்சி என்ற இதழில் (Journal of Medical Internet Research) வெளியிடப்பட்டுள்ளது 

Leave A Reply

Your email address will not be published.