இந்த பத்தும் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமானவர்! – சத்துக்கள்

0 14

முறையான உணவுகள்தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவுகின்றன. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நீர் போன்ற ஊட்டச்சத்துகளை உணவுகளின் வழியே நாம் பெறுகிறோம். இதைத் தவிர, நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான 10 சத்துக்களைப் பார்ப்போம். இந்த சத்துக்கள்தான் நோயில்லாத வாழ்வை நமக்கு அளிக்கின்றன.

ஃபோலிக் ஆசிட் : குழந்தையின் டிஎன்ஏ வளர்ச்சிக்கும், ரத்த விருத்திக்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது.

இரும்புச்சத்து : உடல் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படுகிறது.

கால்சியம் : எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது அவசியம் தேவை.

வைட்டமின் D : உடலுக்கு அவசியம் தேவைப்படும் இது, சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

மெக்னீசியம் : தசை, நரம்பு, தோல் இவைகளுக்கு அவசியமானது.

வைட்டமின் E : நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் அவசியமானது.

ஒமேகா-3 : குறிப்பாக பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் கொழுப்பு இது.

பொட்டாசியம் : ரத்தத்தை நரம்புகள் கொண்டுசெல்ல இந்தச் சத்து பயன்படுகிறது.

வைட்டமின் C : தோல் வியாதிகள் வரமால் காக்கும் சத்து இது.

நார்ச்சத்து : இதயம் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சத்து இது.

காய்கறிகள், கீரைகள், பால், அவகேடோ, முளை கட்டிய பயறுகள், கோதுமை, ஆரஞ்சு. ஸ்ட்ராபெர்ரி , எலுமிச்சை போன்ற பழங்களில் இந்த சத்துக்களைப் பெறலாம்.

Leave A Reply

Your email address will not be published.