பச்சை நிறத்தில் ஒளிர்ந்த சென்னை ரிப்பன் பில்டிங் #WorldGlaucomaWeek2018  

0 17

உலக க்ளூகோமா விழிப்பு உணர்வு தினத்தை ஒட்டி, சென்னை மாநகராட்சிக் கட்டடத்தைப் பச்சை நிறத்தில் ஒளிரச்செய்தனர்.

நமது கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம், இயல்பான அளவைவிட அதிகமாகும்போது, பார்வை நரம்பில் பாதிப்பு ஏற்படும். இதற்கு, க்ளூகோமா (Glaucoma) அல்லது கண் நீர் அழுத்த நோய் என்று பெயர். உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, உலக அளவில் ‌க்ளூகோமா காரணமாக ஏற்படும் பார்வை இழப்புப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில், 1 கோடியே 20 லட்சம் பேர் க்ளூகோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 12 லட்சம் பேர் பார்வையை இழந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

க்ளூகோமா பிரச்னை ச‌மீபகாலமாக அ‌திக‌ரி‌த்துவரு‌கிறது. இதுகு‌றி‌த்து பொதும‌க்களு‌க்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 12- ம் தேதி, உலக க்ளுக்கோமா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த வாரம் முழுவதும் உலக க்ளூகோமா தினமாக கடைப்பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய விழிப்பு உணர்வின் ஒரு பகுதியாக, அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாட்டில், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ரிப்பன் பில்டிங் பச்சை நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. நூற்றாண்டுப் பாரம்பர்யம் மிக்க ரிப்பன் மாளிகை பச்சை நிறத்தில் ஒளிர்ந்ததை சென்னை நகர மக்கள் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.