தானிய அடை, கறுப்புக் கவுனி அரிசி பாயசம், தினை காரமிளகாய் வடை… கிராமத்து உணவுகள்!

0 16

சிறுதானியங்கள் செல்வாக்குடன் இருக்கும் கிராமத்து உணவுகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம் இந்தப் பொங்கல் விடுமுறையில் தானிய அடை கவுனி அரிசி பாயசம் என்று அவற்றையெல்லாம் சமைத்து ருசித்து சாப்பிடுங்கள் தானிய அடைதேவையான பொருள்கள்வரகு மாவு – 1 கப்குதிரைவாலி மாவு- 1 கப்தினை மாவு – 1 கப்சாமை மாவு -1 கப்கம்பு மாவு – 1 கப்கேழ்வரகு மாவு – 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 கப்பச்சைப்பயறு மாவு – 1 கப்கவுனி அரிசி மாவு – 1 கப்சின்ன வெங்காயம் – 1 கைப்பிடிமுருங்கைக்கீரை – 1 கைப்பிடிபச்சை மிளகாய் – 5கொத்துமல்லி – 1 கொத்துகறிவேப்பிலை – 1 கொத்துஉப்பு – சிறிதளவுநல்லெண்ணெய் – 100 மில்லிசெய்முறைவெங்காயம் பச்சை மிளகாய் கொத்துமல்லி கறிவேப்பிலையைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள் அனைத்து மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் கொத்துமல்லி கறிவேப்பிலை கீரை ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பு போட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள் பிசையும்போது சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மாவு இதமாக வரும் பிறகு இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து உருண்டையை வட்டமாகத் தட்டி சிறிதளவு நல்லெண்ணெய் விரவி இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுங்கள் தானிய அடை தயார்முடக்கறுத்தான் தோசை தேவையானவைபுழுங்கல் அரிசி – 1 கப் உளுந்து – அரை கப் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் உப்பு – போதிய அளவு சின்ன வெங்காயம் – 10 நல்லெண்ணெய் – 100 மிலி முடக்கறுத்தான் – 2 கப்செய்முறை       அரிசி உளுந்து வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள் பிறகு அதில் சீரகத்தைச் சேர்த்து அரைத்து உப்புச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும் முடக்கறுத்தான் கீரையை நன்கு அலசி அரைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும் சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்த மாவில் கலக்கவும் பிறகு மாவைத் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து மிதமான தீயில் தோசையாக வார்த்து நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான முடக்கறுத்தான் தோசை தயார் கறுப்பு கவுனி அரிசி பாயசம்தேவையானவை கறுப்பு கவுனி அரிசி – 1கப்பாசிப்பருப்பு – கால் கப்கடலைப் பருப்பு – கால் கப்வெல்லம் – இரண்டரை கப்முந்திரி திராட்சை – 50 கிராம் நெய்- – 2 டேபிள் ஸ்பூன்செய்முறைகவுனி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள் பாசிப்பருப்பை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள் ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய்விட்டு முந்திரி திராட்சையை வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் கடலைப் பருப்பைப் போட்டு வேகவையுங்கள் இது நன்கு வெந்ததும் பாசிப்பருப்பைச் சேருங்கள் இரண்டும் இணைந்து குழைய வெந்ததும் கவுனி அரிசியைச் சேர்ந்து கிளறுங்கள் அரிசி வெந்தவுடன் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை நன்கு கிளறுங்கள் வாசனை பரவியதும் முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்தினை – காரமிளகாய் வடைதேவையானவைதினை- 350 கிராம்துவரம்பருப்பு – 350 கிராம்சின்ன வெங்காயம்- 200 கிராம்காய்ந்த மிளகாய் – 4பூண்டு – 2 (முழுப் பூண்டு)மஞ்சள்தூள்- ஒரு டீஸ்பூன்கொத்தமல்லித்தழை – ஒரு கொத்துகறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுநல்லெண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு உப்பு – தேவையான அளவுசெய்முறை தினையையும் துவரம்பருப்பையும் ஒன்றாக்கி அரை மணி நேரம் ஊறவையுங்கள் சின்ன வெங்காயம் பூண்டைத் தோல் உரித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள் தினை – பருப்புக் கலவை ஊறியவுடன் காய்ந்த மிளகாய் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள் பிறகு சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் கொரகொரப்பாக அரைத்து  தினை – பருப்பு மாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மாவுடன் கலந்து கரண்டியில் அள்ளி ஊற்றும் பதத்துக்குத் தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளுங்கள் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி  அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவைக் கரண்டியால் எடுத்து வாணலியில் ஊற்றிச் சிவக்க வேகவிட்டு எடுங்கள் சத்தான ருசியான தினை – காரமிளகாய் வடை தயார்

Leave A Reply

Your email address will not be published.