உயர்ரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்!

0 7

தொற்றுநோய்களுக்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று தொற்றாநோய்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தொற்றாநோய்களின் பட்டியலில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்துவது உயர்ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உயர்ரத்தஅழுத்த நோயாளிகள் இல்லாத குடும்பத்தைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது இந்த உயர்ரத்த அழுத்தமானது மாரடைப்பு இதயச் செயலிழப்பு பக்கவாதம் மூளை ரத்தக்குழாய்களில் உறைவு  உள்ளிட்ட நோய்களுக்கு முக்கியக் காரணியாக உள்ளதுஉலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி உலக அளவில் 75 லட்சம் மக்கள் உயர்ரத்த அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர் பல்வேறு காரணங்களால் நிகழும் மொத்த உயிரிழப்புகளில் 128 சதவிகிதம் உயர்ரத்த அழுத்தத்தால் நிகழ்கின்றன இந்தியாவைப் பொருத்தவரை மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது இந்தியாவில் 1980-ம் ஆண்டில் இருந்து உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது தற்போதைய நிலவரப்படி நகர்ப்புறங்களில் 20 – 40 சதவிகிதம் கிராமப்புறங்களில் 12 – 17 சதவிகிதம் பேரை உயர்ரத்த அழுத்தம் பாதிக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் உயர்ரத்த அழுத்தம் ஏற்படுகிறது வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த நோய்களைச் சரியாக நிர்வகிக்க முடியும் வாழ்க்கை முறை மாற்றம் என்றால் அதில் முக்கிய இடம் பிடிப்பது உணவுதான் உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 7 உணவுகளைப் பட்டியலிடுகிறார்கள் மருத்துவர்கள் உப்பு சர்க்கரைநாம் உண்ணும் உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உப்பும் சர்க்கரையும்தான் உயர் ரத்த அழுத்தத்துக்கான முக்கியக் காரணிகள் அதற்காக உப்புச் சப்பில்லாத உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்பதில்லை உப்பையும் சர்க்கரையையும் குறைந்த அளவு மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் பெரியவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 கிராம் உப்பும் 25 கிராம் சர்க்கரையும் மட்டும் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை உணவில்  உப்பு சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு சற்று மெனக்கெட வேண்டும் நமது சுவை அரும்புகளைக் குறைவான அளவு உப்பு சர்க்கரைக்குப் பழக்கிவிட்டால் எளிதாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடலாம்பாக்கெட் உணவுகள்பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் உணவுகளான சிப்ஸ் கப் நூடுல்ஸ் வறுத்த நிலக்கடலை போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் உப்பில் காணப்படும் சோடியம்தான் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது அதோடு கண்ணைப் பறிக்கும் வண்ணத்தைக் கொடுப்பதற்காக நிறமிகளும் பாக்கெட்  உணவுகளில் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அதனால் அவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்பதப்படுத்தப்பட்ட இறைச்சிபீட்சா பர்கர் ஹாட் டாக் என நம்முடைய உணவுமுறைக்கு சற்றும் தொடர்பில்லாத உணவு வகைகளில் சேர்க்கப்படும் இறைச்சி மீன் போன்ற அசைவப் பொருள்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டே உபயோகப்படுத்தப்படுகின்றன பதப்படுத்துவதற்கான ரசாயனங்களுடன் அளவுக்கு அதிகமான உப்பும் அவற்றில் சேர்க்கப்படுகிறது அதிக  உப்பு பயன்பாடு நிச்சயம் ரத்தஅழுத்தத்தைப் பாதிக்கும் நாம் சப்புக்கொட்டிச் சாப்பிடும் ஊறுகாய் மாவடு ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடங்கும் மிட்டாய்கள்புதிய புதிய பெயர்களில் வண்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு வரும் சிறிய சிறிய மிட்டாய்களுக்குப் பெரும்பாலானவர்களின் சட்டைப்பைகளில் நிரந்தர இடம் உண்டு இந்த மிட்டாய்களில் இனிப்பைத் தவிர உடலுக்கு ஆரோக்கியம் தரும் எந்த விஷயங்களும் இருப்பதில்லை வண்ண வண்ண மிட்டாய்களைத் தவிர்த்துவிட்டு இயற்கையான இனிப்பு நிறைந்த பழங்களுக்கு நமது சுவை அரும்புகளைப் பழக்குவது நல்லதுகுளிர்பானங்கள்பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்களிலெல்லாம் காபி டீயில் காணப்படும் 39கஃபைன்39 என்ற நச்சு வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது 222 மில்லி அளவுள்ள குளிர்பானத்தில் 28 மில்லிகிராம் கஃபைனும் 375 மில்லி குளிர்பானத்தில் 9 தேக்கரண்டி சர்க்கரையும் இருக்கிறது எனவே குளிர்பானங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களுக்கும் பதில் பழச்சாறுகளில் குறைவான இனிப்பு சேர்த்து அருந்தலாம்மது மதுவில் சர்க்கரையின் அளவு அதிகமாகக் காணப்படும் அதிக மதுப்பழக்கம் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்துவதோடு உடல்பருமனுக்கும் வழிவகுக்கும் நீர்ச்சத்து இழப்பு மற்றும் உடல்பருமன் ஆகியவை உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவரும்  தவிர்க்க வேண்டிய பட்டியலிலும் மதுவுக்குத்தான் முதலிடம்பேக்கரி உணவுகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் கேக் குக்கீஸ் டோநட் என அனைத்து பேக்கரி பொருள்களிலும் சர்க்கரை மற்றும் (கெட்ட) கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் பேக்கரி பொருள்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பாதிக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸையும் (Glycemic Index) அதிகரிக்கும் பட்டியலிடப்பட்டிருக்கும் உணவுகளை உயர்ரத்த அழுத்தம் உடையவர்கள் மட்டும்தான் தவிர்க்க வேண்டும் என்றில்லை நோய்நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வை வாழ விரும்பும் அனைவரும் தவிர்க்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.