326 உள்ளுராட்சி சபைகளுக்கு 22 ஆம் திகதி அதிகாரம்

0 101

உள்ளுராட்சி சபைகள் 326 இற்கான அதிகாரங்களை அமைக்கும் நடவடிக்கை 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சர்ச்சையுள்ள 15 சபைகள் இதில் அடங்க மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் 340 இற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 24 மாநகர சபைகளாகவும், 41 நகர சபைகளாகவும் உள்ளன. பிரதேச சபைகளின் எண்ணிக்கை 275 ஆகும்.

உள்ளுராட்சி சபைகள் அனைத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 8325 பேர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில் 5061 பேர் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய 3264 பேர் விகிதாசார முறையிலும் தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.