பிரதமரின் செயலாளர் எனத் தெரிவித்து பொலிஸ் நிலையங்களுக்கு அழைப்பு, விசாரணை ஆரம்பம்!

0 95

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் எனத் தெரிவித்து நாட்டிலுள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட நபர் தொடர்பில் உடன் விசாரணை நடாத்துமாறு பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க உயர் பொலிஸ் அதிகாரிக்கு இன்று (14) அறிவித்தல் விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தொடர்புகொண்டு குறித்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும், இதன்படி, சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறும் பிரதமரின் செயலாளர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.