ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் துருக்கியில் கைது

0 10

ஐரோப்பாவைக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள எடிரின்  மாகாணத்திலேயே, இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ஊடகங்களிடம் மேலதிக தகவல்களை வெளியிட அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளில் சிறிலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஸ், துனிசியா, ஈரான், ஈராக், பலஸ்தீனம், எகிப்து,சிரியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.