வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்துக்கு அதிகாரம்

0 12

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை  மையத்தில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உயர்மட்ட இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேசினர்.

சில அரசியல்வாதிகள் மீண்டும் 1983 ஜூலைக் கலவரம் போன்ற நிலையை உருவாக்க எத்தனிக்கின்றனர் என்று இராணுவ உயர் அதிகாரிகள் இந்தச் சந்திப்பின் போது, தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர், நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இராணுவத்தினர் அவசரகால விதிகளின் படி உள்ள அதிகாரங்களை அதிகபட்சமாக பயன்படுத்துமாறு கூறினார்.

இதன்படி வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.

பொதுமக்களைக் குழப்பும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது, அவர்களுக்கு எதிராகவும்,  கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவத்துக்கு சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.