சிறிலங்கா அதிபரின் விமானம் விபத்துக்குள்ளானதாக பதிவிட்ட மாணவனுக்கு மறியல்

0 22

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலவைச் சேர்ந்த சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனே இந்த போலிச் செய்தியை பதிவிட்டதாக செய்து செய்யப்படடார்.

அவரை சிறிலங்கா காவல்துறையினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நிறுத்திய போது, மே 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர், வேறு சிலரின் முகநூல் பதிவுகளையே பகிர்ந்து கொண்டதாகவும், அவரை நிபந்தனைப் பிணையில் விடுவிக்குமாறும் அவரது சட்டவாளர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.