கிளிநொச்சி விபத்து – உயிரிழந்த படையினரின் தொகை 6 ஆக உயர்ந்தது

0 22

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட சிறிலங்கா இராணுவ வாகனம் மீது, விரைவு தொடருந்து மோதியது.

இந்த விபத்தில் 4 சிறிலங்கா படையினர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரும், நேற்று மரணமானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் தொகை 5 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இராணுவச் சிப்பாயும் இன்று காலை மரணமானார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.