யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

0 12

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின் கிளைச்  செயலகம் திறக்கப்படவுள்ளது.

இலக்கம், 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்தச் செயலகம் அமையவுள்ளது.

ஏற்கனவே, மாத்தறை, மன்னார் ஆகிய இடங்களில் பிராந்திய கிளைச் செயலகங்களைக் கொண்டுள்ள காணாமல்போனோருக்கான பணியகம், மூன்றாவது பிராந்திய செயலகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் புதிய செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்து கொள்ளவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.