கோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி

0 14

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அதிபர் செயலகத்தில் மேல் மாடியில் உள்ள அதிபரின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

அமைச்சர்களில் ஒருவர், “அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா?” என கேட்டார்.

அந்தக் கேள்வியால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோபமடைந்தார். அவரது கோபம், அவர் அளித்த பதிலிலும் பிரதிபலித்தது.

“உங்களுக்கு என்ன பைத்தியமா?” “நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை.” என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.