புளொட், ரெலோவின் ஆதரவைப் பெற ஜேவிபி முயற்சி

0 4

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக, அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் வஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

எனினும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.