கோத்தாவுக்கு கருணை காட்டும் சிறிலங்கா நீதிமன்றங்கள்

0 4

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமான முறையில் சிறிலங்கா நீதிமன்றங்கள் முடிவெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டிஏ ராஜபக்ச நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டத்தில் அரசாங்க சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டதாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சிறப்பு மேல்நீதிமன்றம் டிசெம்பர் 10ஆம் நாள் வரை விசாரணை செய்வதற்கு  உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒக்ரோபர் 14ஆம் நாள் தொடக்கம் இந்த வழக்கை சிறப்பு மேல் நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால், கோத்தாபய ராஜபக்ச நீதிமன்ற விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், பரப்புரைகளில் தீவிர கவனத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத விலக்குரிமை கிடைத்து விடும் என்பதால், இந்த வழக்கு விசாரிக்கப்பட முடியாத நிலை ஏற்படும்.

வழக்குகள் பலவற்றை எதிர்கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா நீதிமன்றங்கள் அண்மையில் சாதகமான முறையில் உத்தரவுகளை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.