அமொிக்காவிலுள்ள ரஷ்யர்களை வெளியேறுமாறு டிரம்ப் உத்தரவு! 4 ரஷ்யத் தூதுவர்கள் வெளியேறுமாறு யேர்மனி உத்தரவு!

0 28

germany-americaஅமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷிய துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார். போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை மற்றும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்தளத்தின் அருகாமையில் இந்த தூதரகம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு அலுவல் நிமித்தமாக அமெரிக்காவில் தங்கியுள்ள ரஷிய நாட்டை சேர்ந்த உளவுப்படையினர் என சந்தேகிக்கப்படும் சுமார் 60 அதிகாரிகளை இன்னும் 7 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தாருடன் வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலான அதிகாரிகள் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை பணிகள் நிமித்தமாக அமெரிக்காவுக்கு வந்து தங்கியுள்ளவர்கள்.

இதேபோன்று இன்று ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷியா தூதர்கள் 4 பேரையும் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், பிரான்ஸ், உக்ரைன், லத்வியா அரசுகளும் தங்கள் நாட்டை விட்டு ரஷிய தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளன.

ரஷ்ய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷியா நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக ரஷியாவில் இருந்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் அனைவரையும் ரஷியா வெளியேற்றியது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 14 நாடுகள் ரஷ்யத் அதிகாரிகள் மற்றும் தூதுவர்களை வெளியேற்றத் தீர்மானித்துள்ளன.
#Russia #Donald Trump #Angela Merkel

Leave A Reply

Your email address will not be published.