அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை மீட்டு தாருங்கள்: மகஜர் கையளிப்பு!

0 25

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி சுமார் 600 இற்கு மேற்பட்ட உறவுகள் கையெழுத்திட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை இன்றையதினம் (26-03-2018) கையளித்துள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியில் ஒரு ஏக்கர் காணியை ஒருவர் வாங்கி அவா் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை நிறுத்துமாறும், இராணுவத்தால் இடம்பெறும் பயிர்ச்செய்கையையும் நிறுத்துவதோடு, இராணுவம் எமது பிள்ளைகளுக்கு மேல் கிரிகட் விளையாடுவதை நிறுத்துமாறும், குறித்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் துயிலுமில்ல காணி 9 ஏக்கரையும் மீட்டு இம்முறை மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற ஏற்பாடு செய்து தாருங்கள் என சுமார் 600 இற்கும் மேற்பட்ட உறவுகள் கையெழுத்திட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை இன்று (26) கையளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களில் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக நோட்டிஸ் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.”
BNHB
இந்நிலையில் இந்த துயிலுமில்லத்தில் தமது பிள்ளைகள், மற்றும் உறவுகளை புதைத்த மக்கள் சிலர் சுமார் 600 இற்கும் மேற்பட்டவா்களின் கையொப்பங்கள் சேகரித்து மகயர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.

குறித்த மாவீரர் துயிலுமில்ல காணி ஒன்பது ஏக்கரில் ஒரு ஏக்கர் காணியை ஒருவர் பெற்று அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், மிகுதி காணியில் இராணுவம் பப்பாசி செய்கை மேற்கொள்வதோடு விவசாயம் செய்வதாகவும், எமது உறவுகளுக்கு மேல் நின்று கிரிக்கட் விளையாடுவதாகவும் மற்றுமொரு பகுதியில் கன்ரின் நடத்துவதாகவும் இவற்றை எல்லாம் நிறுத்தி எமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரினர்.

கடந்த வருடம் அனைத்து இடங்களிலும் மாவீரர் தினம் கொண்டாடபட்டபோதும் நாம் வீதியில் எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினோம்.

இம்முறை மாவீரர் நாளுக்கு முன்னம் எமது துயிலுமில்ல காணியை மீட்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த ஆவண செய்யுமாறு கண்ணீர் மல்க கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்

இதுதொடர்பில் உரியவர்களிடம் தெரிவிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இத்தோடு இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, மனித உரிமைகள் பேரவை, ஜெனிவா, பாராளுமன்ற உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.