கிளிநொச்சியில் அழிக்கப்படுகின்ற விடுதலைப்புலிகளின் கால யுத்த சின்னம்!

0 24

கடந்தகால யுத்தத்தை நினைவு கூரும் வகையில் கிளிநொச்சியில் அரசினால் கட்டிகாத்து வந்த யுத்த சுவடுகளாக விளங்கும் விழுந்த நிலையில் உள்ள நீர்தாங்கி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெருகிறது.

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் நகர மத்தியில் யுத்தகாலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கி அமைந்திருக்கும் காணியில் புதிதாக கட்டடமொன்றை அமைக்கும் நோக்கில் நேற்று (25.03.2018) குறித்த நீர்தாங்கியை உடைத்து அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நிறுவப்பட்டிருந்த இவ் நீர்தாங்கி நாட்டில் இடம்பெற்ற யுத்தகாரணத்தால் இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கப்பட்டது.

கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதல்தடவையாக நிர்மூலமாக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சமாதான காலப்பகுதியில் மீண்டும் புதிதாக கட்டப்பட்டபின்னர் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான சமாதானம் நிலைத்து நிற்காமல் போன காரணத்தால் மீண்டும் இரண்டு தரப்புக்கும் இறுதி கட்ட யுத்தம் இடம்பெற தொடங்கிய 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் நிர்மூலமாக்கப்பட்ட நீர் தாங்கியை 2009 ஆண்டு காலப்பகுதியில் இருந்து யுத்தத்தை நினைவு கூரும் வகையில் அரசினால் கட்டிகாத்து வந்த நிலையில் தற்போது புதிதாக கட்டடமொன்றை அமைக்கும் நோக்கில் குறித்த காணி ஜந்து மாதங்களுக்கு முன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கியை உடைத்து அகற்றி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.