முகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

0 237

maithri-met-missing (1)முகநூல் பயன்பட்டுக்கு சிறிலங்காவில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்துக்கு இந்த உத்தரவைத் தாம் பிறப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று காலை சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதையடுத்தே, முகநூல் மீதான தடையை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

வெறுப்புணர்வையோ வன்முறைகளையோ தூண்டுவதற்கு தளமாகப் பயன்படுத்தப்படாது என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.