இலங்கையில் அவசரகால நிலை நீடிக்கும்?

0 81

sl army-4வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும்வரையில்இ அவசரக்கால நிலைமை தொடரும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதிஇ எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். அதுவரையில் அவசரக்கால நிலைமை நீடிக்கும் எனவும்இ இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்காக அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். அதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வலியுறுத்திக் கூறுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வன்செயல்கள் பற்றிய உரிய சான்றுகளை முன்வைப்பதற்கும் சேதங்கள் சரிவர மதிப்பீடு செய்யப்பட்டுஇ அதிகபட்ச இழப்பீடுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கும் அவர்கள் கலந்தாலோசித்துள்ளனர்.அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவுடனும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆலோசித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.