முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு

0 18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி,  பௌத்த தகவல் கேந்திர நிலையம் நேற்று சிறிலங்கா காவல்துறை  தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் நாள் விடுதலை புலிகளுக்கு  வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர்,  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.