கூட்டு அரசில் இருந்து விலகும் நாளைத் தீர்மானிக்குமாறு சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு

0 47

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் நாளை தீர்மானிக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவலை கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா சுதந்திரக் கடட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டபோதே தயாசிறி ஜெயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட 16 பேர் கொண்ட  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், எஞ்சிய 23 உறுப்பினர்களும் விரைவில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.