யாருடன் கூட்டு என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு – விக்னேஸ்வரன்

0 19

வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று,  தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் விடுத்துள்ள அழைப்புக் குறித்து  செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அடுத்த மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வருமாறு என்னை பலரும் அழைக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன்.

அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என்ற முடிவு எடுக்கப்படாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு, ஏழு மாதம் தாமதமாகலாம்.

எனவே, இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்டகாலம் இருக்கிறது.

இந்தநிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைப்பதா -இல்லையா என்பது தொடர்பாகவும் நான் சிந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.