ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை சந்தித்தார் மகிந்த

0 16

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மகன் நாமல் ராஜபக்சவும், பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.