பதவி விலகி விடுவேன் – அச்சுறுத்திய சிறிசேன

0 16

தனக்கு நெருக்கடி கொடுத்தால், அதிபர் பதவியை விட்டு விலகி, பொலன்னறுவவில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்குப் போய் விடுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனக்கு அழுத்தங்களைக் கொடுத்தால், நாட்டுக்கு அறிவித்து விட்டு, அதனைச் செய்து விடுவேன் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார் என்று மனோ கணேசன்“ தனது கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பதவியை விட்டு விலகி விடுவேன் என்று, தம்மிடம் அச்சுறுத்தினார் சிறிலங்கா அதிபர் என்று, நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கூறியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.