தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் ரணில் – என்கிறார் மைத்திரி

0 27

ஜனநாயகம் பற்றிப் பேசும் ரணில் விக்கிரமசிங்க முதலில் அதனை தனது கட்சியில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில், நடத்திய கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களுக்கு வழிவிட்டு,  ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்.

25 ஆண்டுகளாக, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் தனக்கு மேல் எவரையும் வளர விடமாட்டார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பற்றி ரணில் விக்கிரமசிங்க பேசுகிறார்.  ஆனால் அவரது சொந்தக் கட்சியில் அவர் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தவறி விட்டார்.

அவர் முதலில் தனது கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.