மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு

0 10

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த  உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால்,  அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி அதனைத், தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், மனுதாரர் வழக்குச் செலவாக ஒரு இலட்சம் ரூபாவை  செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.