ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சாந்த பண்டார

0 10

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு நேற்று தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடும்போது, சாந்த பண்டார புதிய உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வார்.

Leave A Reply

Your email address will not be published.