இருதரப்பு பாதுகாப்பு உடன்பாடு – அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு

0 11

சிறிலங்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இந்த உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது.

இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு பாதுகாப்பு வசதிகளை உருவாக்குதல், பயிற்சிகள், விநியோகங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஆவணத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தலைமையிலான குழுவொன்று ஆராய்ந்த பின்னரே, அதன் பெரும்பாலான உள்ளடக்கங்களை நிராகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.