துறைமுக நகருக்கான நிலப்பரப்பை உருவாக்கும் பணி நிறைவு

0 17

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக, சிறிலங்காவின் பெருநகர  மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடலில் இருந்து நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக இங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

முன்னதாக துறைமுக நகர் எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் தற்போது கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கடலில் இருந்து, 269 ஹெக்ரெயர் நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு. வதிவிட மற்றும் வணிக மையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,

கடலில் இருந்து உருவாக்கப்படும் 269 ஹெக்ரெயர் நிலப்பகுதியில்,  116 ஹெக்ரெயர்  நிலம், சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

எஞ்சிய நிலப்பரப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சொந்தமாக இருக்கும். அதில் 61 ஹெக்ரெயரில் நிதி நகரத்தை அமைக்கப் பயன்படுத்தப்படும்.

ஏனைய 91 ஹெக்ரெயர் பொதுப் பயன்பாட்டுக்கான பகுதியாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.