நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி

0 22

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம், முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானத்தில், அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு- முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந்த நிகழ்வுக்காக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இருந்து சென்ற ஜீப் ஒன்று, அங்கிருந்து வவுனியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, நெடுங்கேணி -தட்டாமலை பகுதியில் உள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில், அம்பேபுஸ்சவை சேர்ந்த  33 வயதுடைய மேஜர் அசங்க லியனகே மற்றும் 30 வயதுடைய கோப்ரல் தர அதிகாரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.