கோத்தாவை அமெரிக்கா தடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் சிறிசேன

0 17

அமெரிக்க குடியுரிமையை கோத்தாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, அதிபர் மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் முயற்சி வெற்றியளிக்காது என்று  அதிபர் சிறிசேன உள்ளிட்ட சிலர் நம்புகின்றனர்.

இது அதிபர் வேட்பாளராக மீண்டும் சிறிசேன போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஐதேகவின் காதுகளுக்கு எட்டிய வதந்திகளின் அடிப்படையிலேயே அவர்கள் இத்தகைய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எனினும், கோத்தாபய ராஜபக்சவே இன்னமும், வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்றும், அமெரிக்க குடியுரிமையை துறப்பது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

குடியுரிமையைத் துறப்பதற்கு முன்னதாக, அதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதை அவர் விரும்புகிறார்” என்றும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.