முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

0 13

முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன.

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.