யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையம் – இந்தியா அமைக்கிறது

0 7

யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையத்தை அமைப்பது தொடர்பாக இந்தியாவும், சிறிலங்காவும் இன்று உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன் ரூபா கொடையின் மூலம் இந்த தகவல் தொழில்நுட்ப வணிக மையம் கட்டப்படவுள்ளது.

அலரி மாளிகையில் இன்று நடந்த நிகழ்வில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.