ஜெனிவாவுக்கு செல்கிறது மாரப்பன தலைமையிலான குழு

0 13

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இந்தக் குழுவில், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நெரின் புள்ளே ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தக் குழுவினர், ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி அசீஸ் மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.